Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுடன் டிரினிடாட் அரசு பேச்சுவார்த்தை

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுடன் டிரினிடாட் அரசு பேச்சுவார்த்தை

டிரினிடாட் நாட்டில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள குவாராகரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வெனிசுலாவில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பது தொடர்பாக, இந்தியாவின் ஓஎன்ஜிசி விதேஷ் மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்களுடன் டிரினிடாட் அண்ட் டொபாகோ அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள குவாராகரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் உயர் ஆணையர் சந்திரதாத் சிங் கூறும்போது, "இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் அவை ஆர்வம் காட்டுகின்றன" என்றார்.

குவாராகரா சுத்திகரிப்பு நிலையம் 2018 நவம்பர் முதல் மூடப்பட்டுள்ளது. தினமும் 1.65 லட்சம் பேரல் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன்கொண்ட இந்த நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர அந்நாடு முயற்சிக்கிறது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், வெனிசுலா எண்ணெயை சுத்திகரிக்கும் இந்த திட்டம், இந்திய நிறுவனங்களுக்குப் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். எனினும், திட்டம் தொடர்பாக இறுதி ஒப்பந்தம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

முந்தைய செய்தி
Tactile pathways win appreciations in Vellore
அடுத்த செய்தி
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஸ்டார்லிங்க் சேவை: ஜெலென்ஸ்கி

தொடர்புடைய செய்திகள்